ஊரக வளர்ச்சி நிறுவனத்துக்கு ஆலோசகர் நியமனம்
சென்னை: மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் ஆலோசகராக பழனிதுரை என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் துறை செயலர் பிரசாந்த் எம்.வடநரே வெளியிட்ட அறிவிப்பு:
செங்கல்பட்டு, மறைமலை நகரில் மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறு வனத்தில், கிராம ஊராட்சிகளின் திறன் மேம்பாட்டுக்கான கவுரவ ஆலோசகராக, திண்டுக்கல் காந்தி கிராமம் நிகர்நிலை பல்கலை முன்னாள் பேராசிரியர் பழனிதுரை தற்காலிகமாக நியமனம் செய்யப்படுகிறார்.
ஊரக வளர்ச்சித் துறை தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில், அமைச் சருக்கு தேவையான தொழில்முறை ஆலோசனை களை வழங்குவதே இவரது முக்கியப் பணி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.