Arts, culture, entertainment and media
மருத்துவ காப்பீடு குறைபாடு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு:தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று
அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலக
வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்
பன்னீர்செல்வம் தலைமையில், நிர்வாகிகள் மணிபாரதி, பாலசுப்பிர
மணியம் பேசினர்.
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்காக கடந்த ஜூலை, 1
முதல் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதற்கான
மாதாந்திர பிரீமிய தொகை, 497ல் இருந்து, 644 ரூபாயாக உயர்த்தி, 6.75
லட்சம் ஓய்வூதியர்களிடம் பிடித்தம் செய்து வருகின்றனர்.
காப்பீடு திட்டத்தில் சலுகை முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கண் புரை அறுவை சிகிச்சைக்கு காப்பீடு வரம்பு, 31,000
ரூபாயில் இருந்து, 13,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. நிபந்தனை,
கட்டுப்பாடு அதிகமாக உள்ளது.
சிகிச்சை பட்டியல் இடப்படாத மருத்துவமனைகளில் சேர்ந்தால்,
மருத்துவ செலவில், 30 சதவீதம் மட்டுமே காப்பீடு தொகையாக
வழங்கப்படும். பணமில்லா சிகிச்சை திட்டம் என அறிவித்தும், சொந்த
பணத்தில் ஓய்வூதியர் சிகிச்சை பெற வேண்டி உள்ளது. எனவே குறைபாடுகளை
களைந்து இலவச மருத்துவ சிகிச்சை பெற உத்தரவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
செய்தனர்.