Arts, culture, entertainment and media
ஓய்வூதியர் சங்கத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் கலியமூர்த்தி, பத்மநாபன், ராமதாஸ், திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தனர். ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் காசிநாதன் வரவேற்றார்.
இணை செயலாளர்கள் சிகாமணி, ஞானமணி, ஜோதி, பழனி கண்டன உரையாற்றினார். ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலர் உள்ளிட்ட அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
குழந்தைவேலு நன்றி கூறினார்.