10 நாட்களாக முகாம் யானைகளால் அச்சம்
வால்பாறை: வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. முடீஸ் அடுத்துள்ள ஆனைமுடி எஸ்டேட் முதல் பிரிவு தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் முகாமிட்ட இரண்டு யானைகள், அங்குள்ள தோட்ட அதிகாரி பாலசந்தர் என்பவரின் வீட்டை இடித்து உள்ளே இருந்த பொருட்களை துாக்கி வீசின. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
இதனிடையே குடியிருப்பை யானைகள் சேதப்படுத்தியதை அறிந்த தொழிலாளர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து, நீண்ட நேர போராட்டத்துக்கு பின், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். கடந்த, 10 நாட்களாக இந்த யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதி அருகிலேயே முகாமிடுவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.