பார் ஊழியர் அடித்து கொலை

அம்பத்துார்: 'டிப்ஸ்' வாங்கும் தகராறில் ௫௦ வயது 'பார்' ஊழியர் சீனிவாசன் அடித்துக் கொல்லப்பட்டார்.
அம்பத்துார், கள்ளிக்குப்பம் அடுத்த சூரப்பட்டு, சிவபிரகாசம் நகரில், தனியார் மதுக்கூடம் செயல்பட்டு வருகிறது.
அதன் ஊழியரான, ஆந்திராவைச் சேர்ந்த சீனிவாசன், 50, தலையில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில், மதுக்கூடத்தில் நேற்று இறந்து கிடந்தார்.
தகவலறிந்து சென்ற புதுார் இன்ஸ்பெக்டர் சடையாண்டி மற்றும் போலீசார், சீனிவாசனின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், அதே மதுக்கூடத்தில் பணியாற்றும் சசிகுமார், 39, என்பவர், 'டிப்ஸ்' வாங்கும் தகராறில் இரும்பு நாற்காலியால் தாக்கி, சீனிவாசனை கொன்றது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.