Arts, culture, entertainment and media
பெய்ஜிங் செல்கிறார் ஈரான் அமைச்சர் அராக்சி: சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி சீனா செல்கிறார். அங்கு அவர் சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்து பேசுகிறார்.
அமெரிக்கா, ஈரான் போர் இன்னமும் ஓயவில்வை. இடையில் போர் நிறுத்தம், அதற்கான பேச்சுவார்த்தை, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என எதுவும் பலனிக்கவில்லை. இரு நாடுகள் இடையேயான மோதல்கள் மேலும் தீவிரம் அடைந்துள்ளன.
ஈரான் ஒரு தோற்றுக் கொண்டிருக்கும் நாடு என்று டிரம்ப் வலைதளத்தில் பதிவிட, பேச்சு வார்த்தைக்கு தயார் என்பது குறித்து ஈரான் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சீன அதிபர் ஜி ஜின்பிங் செப். 24ம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந் நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயை சந்திக்க, ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி செப்.16ம் தேதி சீனா செல்கிறார். அவரது பயணத்தை சீனா வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது.
வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஈரான் அமெரிக்கா போர் குறித்து இந்த சந்திப்பில் முக்கியமாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடனான ஈரானின் ஆயுத மோதல் காரணமாக மேற்காசியாவில் பதட்டம் நீடித்து வருகிறது. எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.