Arts, culture, entertainment and media
”அமெரிக்காவுடன் சண்டையிட விருப்பம் இல்லை”; - ஈரான் அமைச்சர் அராக்சி

ஆறு மாதங்களுக்கும் மேலாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், சம்பந்தப்பட்ட இரு நாடுகள் மட்டுமல்லாமல், மற்ற உலக நாடுகளும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.
இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், ”அமெரிக்கா உடன் மோதலைத் தொடருவதில் ஈரானுக்கு விருப்பமில்லை” என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாகச் சீனா சென்றுள்ள அப்பாஸ் அராக்சி, இன்று (16-09-26) சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை நேரில் சந்தித்து வளைகுடா போர் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், ”அமெரிக்கா உடனான மோதலைத் தொடர ஈரானுக்கு விருப்பமில்லை. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஓமன் உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது” என்றும் அராக்சி தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இருதரப்பும் இணைந்து மீண்டும் அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என சீன அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)