Religion
விநாயகா மிஷன்ஸ் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
சேலம்; சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை சார்பில், சேலம், 2ம் அக்ர-ஹாரத்தில் அஷ்ட விநாயகர் சிலை அமைத்து, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன அறக்-கட்டளை அறங்காவலர் அன்னபூரணி தலைமை வகித்தார். விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்-யப்பட்டு சிறப்பு பூஜை
நடந்தது.
பல்கலை துணைத்தலைவர் சந்திரசேகர், இயக்குனர்கள் அருணா-தேவி, ராமசாமி, முதுநிலை மேலாளர் பாலசுப்ர-மணியன், அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்-றனர். ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் அஷ்ட விநாயகரை வழிபட்டனர்.