Arts, culture, entertainment and media
வர்த்தகர்கள் சங்கத்தினர் மனு
திண்டுக்கல்: வேடசந்துார் அனைத்து வர்த்தகர்கள் சங்க பொதுச்செயலாளர் ராஜா, துணைச்செயலாளர் தனபால், பொருளாளர் பார்த்தசாரதி, உறுப்பினர்கள் வாசுமன்னார், அரவிந்த், கார்த்திகேயன் ஆகியோர் கலெக்டர் துர்காவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
குடகனாற்றில் நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்து தண்ணீர் திசை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் வறண்டுவிட்டது. மக்கள் குடிநீருக்கு அவதிப்படும் நிலை உள்ளது. பயிர் சாகுபடிக்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் தவிக்கின்றனர். அரசாணை வெளியிட்டும் அகற்றப்படாமல் உள்ளது. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.