Arts, culture, entertainment and media
செப்.,7ல் கடையடைப்பு போராட்டம் வர்த்தகர்கள் சங்கம் அறிவிப்பு
வேடசந்துார், செப்.5 மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் குடகனாற்றின் குறுக்கே ராஜவாய்க்காலில்
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் குடகனாற்றின் குறுக்கே ராஜவாய்க்காலில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால் ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம், அழகாபுரி குடகனாறு அணைப்பகுதிக்கு நீர்வரத்து முறையாக இல்லை. வறட்சி ஏற்பட்டு மக்கள் குடிநீருக்கு அவதிப்படும் நிலை உருவாகி வருகிறது.
இப்பிரச்னையை முன்னிறுத்தி வேடசந்துார் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் சுகுமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ராஜவாய்க்கால் தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தி செப்.,7 காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.