அரும்புலியூர் சாலை வளைவுகளில் எச்சரிக்கை பலகை தேவை வாகன ஓட்டிகள் கோரிக்கை
அரும்புலியூர், செப். 17– அரும்புலியூர் சாலையில் உள்ள அபாயகரமான வளைவுகளில் எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்ப

அரும்புலியூர் சாலையில் உள்ள அபாயகரமான வளைவுகளில் எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்ப அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கத்தில் இருந்து அருங்குன்றம் செல்லும் இணைப்பு சாலை வழியாக சீத்தாவரம், பழவேரி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
மேலும், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தோர் வாகனங்கள் மூலம் இச்சாலையை பயன்படுத்தி வாலாஜாபாத், சாலவாக்கம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையில் அரும்புலியூர் விவசாய நிலங்களையொட்டிய சாலையில் அடுத்தடுத்து மூன்று வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.
மின்வசதி இல்லாத இந்த சாலை வளைவுகளில், இரவு நேரங்களில் வாகனங்களை இயக்குவதில் வாகன ஓட்டிகள் அச்சத்திற்குள்ளாகின்றனர்.
எனவே, இச்சாலையில் உள்ள வளைவு பகுதிகளில் எச்சரிக்கை பலகை மற்றும் சாலையோர தாழ்வு பகுதிகளில் தடுப்பு அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.