Sport
அதிக கோல்கள்: டாப் 10 பிரேசில் வீரர்கள் பட்டியலில் இணைந்த ரபீனியா!

சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்கள் அடித்த பிரேசில் வீரர்கள் பட்டியலில் இணைந்த ரபீனியா குறித்து...
கோல் அடித்த மகிழ்ச்சியில் ரபீனியா - படம்: எக்ஸ் / எஃப்சி பார்சிலோனா
சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்கள் அடித்த டாப் 10 பிரேசில் வீரர்கள் பட்டியலில் பார்சிலோனாவின் கேப்டன் ரபீனியா இணைந்துள்ளார்.
பிரேசிலைச் சேர்ந்த ரபீனியா (29 வயது) பார்சிலோனா அணியில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் மட்டும் 5 போட்டிகளில் 8 கோல்கள், 1 அசிஸ்ட் செய்து அசத்தியுள்ளார்.
சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நேற்று (செப்.9) முதல் நடைபெற தொடங்கியுள்ளன. ஐரோப்பிய கண்டத்திலேயே கிளப்புகளுக்கான மிகப் பெரிய கால்பந்துத் தொடராக இருக்கின்றது.
பார்சிலோனா அணி தனது முதல் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் 5-1 என அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரபீனியா 2 கோல்கள் அடித்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்கள் அடித்த டாப் 10 பிரேசில் வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
சாம்பியன்ஸ் லீக்கில் 20 கோல்கள் அடித்த ரொமாரியோவை பின்னுக்குத் தள்ளி 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சாம்பியன்ஸ் லீக் டாப் 10 பிரேசில் வீரர்கள்
Most Goals In the Champions League: Raphinha joins the list of top 10 Brazilian players!
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.