Arts, culture, entertainment and media
தமிழகத்திற்கு பாடப்புத்தக ஆர்டர்
சிவகாசி: ''தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் சார்பில் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் ஆர்டரை தமிழகத்திற்கு மட்டும் வழங்குவது தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் ,''என தமிழ்நாடு பாடநுால், கல்வியியல் பணிகள் கழக தலைவர் லயோலா மணி கூறினார்.
சிவகாசியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நமது மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியுடன் இருக்கிறார்.
தமிழக பாடப்புத்தகம் தமிழகத்திலேயே அச்சிடப்படுவது குறித்து கலந்து ஆலோசனை நடத்தி முறையான அறிவிப்பு செய்யப்படும்.
புத்தகங்கள் அச்சிடுவதில் கடந்த ஆட்சியாளர்கள் பல தவறுகள் செய்துள்ளார்கள்.
அவர்கள் செய்த தவறுகளையும் சேர்த்து சரி செய்வதற்கு நாங்கள் வந்துள்ளோம். எல்லோருக்குமான ஒரு அரசாங்கமும், எல்லோருக்குமான தலைவராகவும் முதல்வர் விஜய் இருக்கிறார். எனவே அனைத்து குறைகளும் விரைவில் சரி செய்யப்படும், என்றார்.