Economy, business and finance
வீடு புகுந்து நகை திருடியவருக்கு காப்பு
பெருந்துறை:பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில், முள்ளம்பட்டி சிவசக்தி அவென்யூவை சேர்ந்தவர் சிவகுமார், 47.
அடுத்த காஞ்சிக்கோவில், முள்ளம்பட்டி சிவசக்தி அவென்யூவை
சேர்ந்தவர் சிவகுமார், 47. தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியின்
திருச்செங்கோடு கிளை மேலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இவருக்கு
உடல்நிலை சரியில்லாததால், ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள தனியார்
மருத்துவமனைக்கு, மனைவியுடன் சென்று விட்டு, இரவு திரும்பினார்.
அப்போது, இவர்கள் வந்த காரின் சத்தம் கேட்டு, வீட்டினுள் இருந்து ஒருவர்
சுவர் ஏறி குறித்து ஓடி, சிறிது தூரத்தில் நிறுத்தி இருந்த பைக்கை
எடுத்துக் கொண்டு தப்பினார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ
உடைக்கப்பட்டு, அதில் இருந்த இரண்டரை பவுன் நகை திருட்டு போனது
தெரிந்தது.காஞ்சிக்கோவில் போலீசார் விசாரித்து, புதுக்கோட்டை
மாவட்டம், தர்காராஜ பட்டியை சேர்ந்த விஜயகுமார், 36, என்பவரை கைது
செய்து, அவரிடம் இருந்து திருட்டு போன நகைகளை மீட்டு விசாரித்து
வருகின்றனர்.