Religion
விஸ்வலிங்கேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
நெல்லிக்குப்பம், செப். 18– நெல்லிக்குப்பம் விஸ்வநாதபுரம் விஸ்வலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று
நெல்லிக்குப்பம் விஸ்வநாதபுரம் விஸ்வலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
அதனையொட்டி கடந்த 15 ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் நடந்தது.
நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹீதி, தீபாராதனையை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து ஒரே சமயத்தில் செல்வ விநாயகர், விஸ்வலிங்கேஸ்வரர், திரவுபதி அம்மன், முத்துமாரியம்மன், முருகன், கெங்கையம்மன், வெள்ளந்தாங்கி ஐயனார், ஐயப்பன், ஆஞ்சநேயர் கோவில்களின் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.