Economy, business and finance
பெண் போலீசின் வீட்டு பூட்டை உடைத்து திருட்டு
திருநின்றவூர்: திருநின்றவூரில் பெண் போலீசின் வீட்டு பூட்டை உடைத்து, ஆறு சவரன் நகை மற்றும் பணத்தை திருடியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
நடுக்குத்தகை, பெரியபாளையம் நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 45; தனியார் வங்கி உதவி மேலாளர். இவரது மனைவி ஜெபஷீலா, 43; ஆவடி மத்திய குற்றப்பிரிவு பெண் காவலர். தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் தம்பதி இருவரும் வேலைக்கு சென்றனர். இந்நிலையில், அவரது மகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 6 சவரன் நகை, 10,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. இது குறித்து திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
