Lifestyle and human interest
மின்வெட்டால் மக்கள் அதிருப்தி 4 துணை மின் நிலையத்தில் மின்தடை ரத்து
ப.வேலுார்:பரமத்தி வேலுார் பகுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளதால், அப்பகுதியில்
வேலுார் பகுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அதிருப்தியில்
உள்ளதால், அப்பகுதியில் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து
செய்யப்பட்டுள்ளது.
'நல்லுார், கபிலர்மலை, ஜேடர்பாளையம் ஆகிய,
மூன்று துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும்
பகுதிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால்,
இன்று, மின்வினியோகம் இருக்காது' என, ப.வேலுார் மின்வாரிய
செயற்பொறியாளர் வரதராஜன் அறிவித்திருந்தார். இந்நிலையில்,
நல்லுார், கபிலர்மலை, ஜேடர்பாளையம் ஆகிய, மூன்று துணை மின்
நிலையங்களில் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், வாழவந்தி துணை மின் நிலையத்திற்கு, நாளை அறிவிக்கப்பட்ட
மின்தடையும் ரத்து செய்யப்பட்டு, வழக்கம்போல் மின் வினியோகம்
இருக்கும் என, மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
அறிவிப்பு காரணமாக சிறிய கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை விடுமுறை
மற்றும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி உள்ளது. விடுமுறை விடப்பட்ட பல
கடைகளில் வியாபாரம் முற்றிலும் பாதிப்படைகிறது.
செய்த நிலையில் மின்தடை எந்த அறிவிப்பும் இன்றி திடீரென ரத்து
செய்யப்பட்டது. பரமத்தி வேலுார் புறநகர் பகுதிகளில், கடந்த ஒரு
வாரமாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள்
புகார் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் முன் அறிவிப்பு இல்லாமல்
மின் தடையால், குழந்தைகள், முதியவர்கள் துாங்க முடியாமல்
சிரமப்படுகின்றனர். சிறு, குறு தொழில் முனைவோரும் பெரிதளவில்
பாதிக்கப்படுகின்றனர்.
கொத்தமங்கலம், ஆனங்கூர், சோழசிராமணி, பிலிக்கல்பாளையம்,
பாண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தினசரி பகல், இரவு
நேரங்களில் மின் தடை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள்
பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பரமத்தி வேலுார் பகுதிகளில் தொடர்
மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால்
அப்பகுதியில் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்துள்ளனர்.
ப.வேலுார் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் கூறுகையில்,
''நல்லுார், கபிலர்மலை, ஜேடர்பாளையம், வாழவந்தி ஆகிய நான்கு துணை மின்
நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட மின்தடை
நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. நிர்வாக
காரணங்கள் என்னவென்பது குறித்து தெரியாது,'' என்றார்.