Arts, culture, entertainment and media
‘கேஜிஎஃப்’ பட நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

‘கேஜிஎஃப்’ படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் கவனம் பெற்ற கன்னட நடிகர் அனந்த் நாக்-க்கு 2024-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 270 திரைப்படங்களுக்கும் மேல் நடித்தவர் அனந்த் நாக். கன்னட திரையுலகிலிருந்து வெளியாகி பான் இந்தியா அளவில் மாபெரும் ஹிட்டடித்த ‘கேஜிஎஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரையுலகில் அறிமுகமாகி 53 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள அனந்த் நாக் கன்னட சினிமாவில் பழம்பெரும் நடிகராக வலம் வருகிறார்.
இந்திய திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2024-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அவருக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி குஜராத்தில் நடைபெறும் 72-வது தேசிய திரைப்பட விருது விழாவில் அனந்த் நாக்-க்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
ದಾದಾಸಾಹೇಬ್ ಫಾಲ್ಕೆ ಪ್ರಶಸ್ತಿಯಿಂದ ಪುರಸ್ಕೃತರಾದ ಪ್ರಸಿದ್ಧ ನಟ ಅನಂತ್ ನಾಗ್ ಅವರಿಗೆ ಅಭಿನಂದನೆಗಳು.
ಕಳೆದ ಹಲವು ದಶಕಗಳಿಂದ, ಅವರ ಸಹಜ ಅಭಿನಯ, ಗಮನಾರ್ಹ ವೈವಿಧ್ಯತೆ ಹಾಗೂ ಶ್ರೇಷ್ಠ ಕಲಾಪ್ರತಿಭೆಯು ಭಾರತೀಯ ಚಲನಚಿತ್ರರಂಗದಲ್ಲಿ, ವಿಶೇಷವಾಗಿ ಕನ್ನಡ ಚಿತ್ರರಂಗದಲ್ಲಿ, ಅವಿಸ್ಮರಣೀಯ ಛಾಪನ್ನು ಮೂಡಿಸಿವೆ. ಅವರು ಅಭಿನಯಿಸಿದ ಪ್ರತಿಯೊಂದು… https://t.co/2jimAZM16T
இந்நிலையில், அனந்த் நாக்-க்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தாதா சாகேப் பால்கே விருது பெரும் புகழ்பெற்ற கலைஞர் அனந்த் நாக் அவர்களுக்கு வாழ்த்துகள். தனது இயல்பான நடிப்பால் கன்னட திரையுலகில் மட்டுமல்லாமல், இந்திய திரையுலகில் முத்திரை பதித்தவர். அவருக்கு இது தகுதியான கௌரவம்” என புகழ்ந்துள்ளார்.
டெங்கு பரவல்: “கர்ப்பிணிகளுக்கான சிகிச்சையில் கூடுதல் கவனம் வேண்டும்” - பொது சுகாதாரத்துறை!
பாதிப்புடன் வரும் கர்ப்பிணிகளை அலட்சியப்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும்.
காய்ச்சல் பாதிப்புள்ள கர்ப்பிணிகளை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை.
