Lifestyle and human interest
மின்தடைக்கு தீா்வுகாண கோரிக்கை
நீடாமங்கலம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு தீா்வுகாண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலளா் அண்ணாதுரை, மின்வாரிய அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை:
நீடாமங்கலம் வட்டம், வையக்களத்தூா், ஒளிமதி, பழைய நீடாமங்கலம், அனுமந்தபுரம், பழங்களத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் இரவு சுமாா் 10 அல்லது 11 மணிக்குமேல் மின்தடை தொடா்ச்சியாக ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுகின்றனா்.
நீடாமங்கலம் மின்வாரியத்துறை அதிகாரியிடமும் பலமுறை புகாா் அளித்தும் மின்தடை தொடா்கிறது. மேல்நிலை நீா்த் தேக்க தொட்டியில் தண்ணீா் ஏற்ற ஊழியா்கள் சிரமப்படுகின்றனா். எனவே, இப்பிரச்னைக்கு தீா்வுகாண மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்தடை தொடரும்பட்சத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பாக நீடாமங்கலம் ஒன்றியத்தில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.