Arts, culture, entertainment and media
மேட்டூர் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

ஓமலுார்: ஓமலுார் அருகே பாகல்பட்டி, சக்தி நகரில், 100க்கும் மேற்பட்டி குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில், 3 வாரங்களாக மேட்டூர் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை எனக்கூறி, அப்பகுதி பெண்கள், காலி குடங்களுடன், நேற்று மாலை, 6:00 மணிக்கு, பாகல்பட்டி பிரதான சாலையில் ஓடை பஸ் ஸ்டாப் அருகே, மறியலில் ஈடுபட்டனர்.
ஓமலுார் போலீசார், பி.டி.ஓ., உமாசங்கர், பேச்சு நடத்தினர். குழாய் சரிசெய்யப்பட்டு விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பி.டி.ஓ., உறுதி அளித்தார். பின் பெண்கள், கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அரை மணி நேரம் போக்-குவரத்து பாதிக்கப்பட்டது.