Lifestyle and human interest
உதவித்தொகை ரூ.6,000 வழங்கக்கோரி மா.திறனாளிகள் கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

நாமக்கல்; மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொ-கையை, 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கக்கோரி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை-யிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட, 114 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனா-ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியு-றுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்-றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் நாகேஸ்வரி தலைமை வகித்தார். துணை தலை வர் ரங்கசாமி, பொரு-ளாளர் அருண்குமார், மாவட்ட செயற்குழு உறுப்-பினர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மாதாந்திர உதவித்தொ-கையை, 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்-றுத்திறனாளிகளுக்கும், உடனடியாக உதவித்-தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, முற்றுகை போராட்-டத்தில் ஈடுபட்ட, ஆண்கள், பெண்கள் உள்பட, 114 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து, மாலையில்
விடுவிக்கப்பட்டனர்.