Politics
அமாவாசை சிறப்பு வழிபாடு
சின்னாளபட்டி:ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூலவர், உற்சவர் கோதண்டராமருக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
சின்னாளபட்டி லிங்குசாமி மடம், அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், குட்டத்துப்பட்டி பிச்சை சித்தர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் 21 வகை திரவிய அபிஷேகம், மலர்களால் அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. மழை வேண்டி நடந்த சிறப்பு யாக பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.