Politics
ஆவணி அமாவாசை விழா

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஆவணி அமாவாசை விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு சாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் பிரார்த்தனை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாவூற்று வேலப்பர் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு வேலப்பர் சுவாமி, கருப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.