Arts, culture, entertainment and media
தமிழின் செழுமையை வீடுகளுக்குக் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா! சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல்

தமிழின் செழுமையை வீடுகளுக்குக் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூத்த தமிழறிஞர், பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், பேராசிரியர் சாலமன் பாப்பையா, உடல்நலக் குறைவால் மதுரையில் செப்.11ஆம் தேதி காலமனார். அவருக்கு வயது 90. இன்று மதுரையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவிருக்கின்றன.
உடல்நலக் குறைவால் சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சாலமன் பாப்பையா, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவரது மறைவுக்கு பல முக்கிய தலைவர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அவரது இறுச் சடங்குக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், பட்டிமன்ற மரபின் வழியாக தமிழ் மொழியின் செழுமையை எண்ணற்ற இல்லங்களுக்குக் கொண்டு சென்று, தலைமுறைகளை ஊக்குவித்தவர். தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்காக அவர் ஆற்றிய வாழ்நாள் முழுவதுமான பணி என்றும் நினைவுகூரப்படும்.
அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்கள், மாணவர்கள் மற்றும் அன்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.