Religion
திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ. 93 லட்சம் காணிக்கை
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள உண்டியல்கள், உப கோயில்கள் உண்டியல்கள் நேற்று கோயில் துணை கமிஷனர் செல்வி, இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி கமிஷனர் இளங்கோ, திருப்பரங்குன்றம் ஆய்வர் இளவரசி,
கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சுமதி, சத்தியசீலன் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ. 93 லட்சத்து 28 ஆயிரம் ரொக்கம், 147 கிராம் தங்கம், 2.7 கிலோ வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவியர், பக்தர்கள் பேரவையினர், கோயில் பணியாளர்கள் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.