Religion
உண்டியல் திறந்ததும் குவிந்த காணிக்கை! தஞ்சை பெரிய கோவிலில் கிடைத்தது இத்தனை லட்சம்

தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் 50 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும், 47 கிராம் தங்கமும், 194 கிராம் வெள்ளியும் சேகரிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி, வராகி அம்மன், கரூரார் சித்தர், விநாயகர், முருகன் சன்னதிகளில் மொத்தம் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு, பெரியநாயகி அம்மன் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இந்த பணியின்போது, கோவில் நிர்வாகத்தினர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர். பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட ரொக்கம் 50 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் என கணக்கிடப்பட்டது. மேலும், 47 கிராம் தங்கமும், 194 கிராம் வெள்ளியும் உண்டியல்களில் இருந்து கிடைத்துள்ளன.
