Politics
போலீஸ் செய்திகள்
பெண்ணிடம் ரூ.3.73 லட்சம் மோசடி சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரை சேர்ந்தவர்
சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரை சேர்ந்தவர் பூஜா 33. இவரது அலைபேசிக்கு பரிபஸ் இந்தியா மார்க்கெட் இன்பர்மேஷன் ஷேரிங் குரூப் என்ற இணையதள நிறுவனம் வழியாக முதலீடு செய்தால் 5 சதவீதம் லாபம் கிடைக்கும் என தகவல் வந்துள்ளது. இதனை நம்பிய பூஜா, முதலில் ரூ.20 ஆயிரம் முதலீடு செய்தார். தொடர்ந்து அதிக லாபம் பெறலாம் என நம்ப வைத்து அந்நிறுவனத்தில் ரூ.3 லட்சத்து 73 ஆயிரம் செலுத்தி ஏமாற்றமடைந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.