Politics
போலீஸ் செய்திகள்:
பெண்ணிடம் ரூ.3.73 லட்சம் மோசடி சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரை சேர்ந்தவர் பூஜா
சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரை சேர்ந்தவர் பூஜா 33. இவரது அலைபேசிக்கு பரிபஸ் இந்தியா மார்க்கெட் இன்பர்மேஷன் ஷேரிங் குரூப் என்ற இணையதள நிறுவனம் வழியாக முதலீடு செய்தால் 5 சதவீதம் லாபம் கிடைக்கும் என தகவல் வந்துள்ளது. இதனை நம்பிய பூஜா, முதலில் ரூ.20 ஆயிரம் முதலீடு செய்தார். தொடர்ந்து அதிக லாபம் பெறலாம் என நம்ப வைத்து அந்நிறுவனத்தில் ரூ.3 லட்சத்து 73 ஆயிரம் செலுத்தி ஏமாற்றமடைந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர்: விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.என்., நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் 21. இவர் நேற்று இரவு 8:30 மணிக்கு டூவீலரில் (ஹெல்மட் அணியவில்லை) மல்லாங்கிணர் ரோட்டில் பாண்டியன் நகரில் சென்றார். அப்போது எதிரே டூவீலரில் வந்த கே.கே.எஸ்.எஸ்.என்., நகரைச் சேர்ந்த ஜான் காலேப் 18, நவீன் பிரகாஷ் 21, ஆகியோர் மீது மோதியதில் சந்தோஷ் குமார் பலியானார். மற்ற இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.
சாத்துார்: சாத்துார் மேட்ட மலையைச் சேர்ந்தவர் நாராயணசாமி 69.நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் முன்பு டூவீலரை நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது டூவீலர் திருடு போயிருந்தது. சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.