Politics
அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்: ராகுல் காந்தி

அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளது குறித்து...
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி - கோப்புப்படம்
ஆசிரியர் நாளை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, ஆண்டுதோறும் ஆசிரியர் நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ச் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிப்புக்குரிய ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களின் அறிவு, சேவை, அர்ப்பணிப்பின் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை வடிமைக்க வழிகாட்டுகிறீர்கள். உங்களின் பங்கு மதிப்பிட முடியாதது.
இன்று, இந்தியாவின் கல்வி அமைப்பு நமது முன் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகள், தரமான கல்வி மற்றும் ஒளிமயமான எதிர்காலம் ஆகியவற்றை வழங்கும் வகையில் கல்வி அமைப்பை நாம் வடிவமைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
à¤à¤¾à¤°à¤¤ à¤à¥ पà¥à¤°à¥à¤µ राषà¥à¤à¥à¤°à¤ªà¤¤à¤¿ डà¥. सरà¥à¤µà¤ªà¤²à¥à¤²à¥ राधाà¤à¥à¤·à¥à¤£à¤¨ à¤à¥ à¤à¥ à¤à¤¯à¤à¤¤à¥ पर à¤à¤¨à¥à¤¹à¥à¤ सादर नमन।
राषà¥à¤à¥à¤°à¥à¤¯ शिà¤à¥à¤·à¤ दिवस पर सà¤à¥ à¤à¥à¤°à¥à¤à¤¨à¥à¤ à¤à¥ हारà¥à¤¦à¤¿à¤ शà¥à¤à¤à¤¾à¤®à¤¨à¤¾à¤à¤à¥¤ à¤à¤ªà¤¨à¥ à¤à¥à¤à¤¾à¤¨, सà¥à¤µà¤¾ à¤à¤° समरà¥à¤ªà¤£ सॠà¤à¤ª à¤à¤¾à¤¤à¥à¤°à¥à¤ à¤à¤¾ à¤à¤µà¤¿à¤·à¥à¤¯ सà¤à¤µà¤¾à¤°à¤¤à¥ हà¥à¤ à¤à¤° दà¥à¤¶ à¤à¥ à¤à¤¨à¥ वालॠपà¥à¤¢à¤¼à¤¿à¤¯à¥à¤ à¤à¥ दिशा दà¥à¤¤à¥ हà¥à¤ - à¤à¤ªà¤à¤¾ यà¥à¤à¤¦à¤¾à¤¨ à¤à¤®à¥à¤²à¥à¤¯ हà¥à¥¤
Extending his wishes on the occasion of Teachers' Day, Congress leader and Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi stated, "Equal opportunities must be provided to all students."
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.