லாரி டிரைவர்களை கத்தியால் குத்தி பணம், மொபைல் பறிப்பு புதுச்சேரி வாலிபர்கள் 2 பேர் கைது
கண்டமங்கலம்: டிரைவர்களை கத்தியால் குத்தி ரூ.57 ஆயிரம் மற்றும் மொபைல் போன்களை பறித்துச்சென்ற வழக்கில் புதுச்சேரியை சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்துார் அடுத்த கொளத்துார் தொகுதியை சேர்ந்தவர் அருணாசலம் வயது 43; லாரி டிரைவர்.
இவர், சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அருணாசலம் கடந்த ஆக., 17ம் தேதி மதுரையில் இருந்து புதுச்சேரி திருபவனைக்கு அரசி லோடு ஏற்றிச்சென்றார்.
திருபுவனையில் அரிசி மூட்டைகளை இறக்கி விட்டு, அடுத்த லோடு எடுப்பதற்காக விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் சென்றார்.
நள்ளிரவு 1;00 மணிக்கு கண்டமங்கலம் அடுத்த எம்.என் குப்பம் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் லாரியை நிறுத்திவிட்டு துாங்கினார்.
அப்போது பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள் அருணாசலத்தின் கழுத்தில் கத்தியால் குத்தி மிரட்டி ரூ. 57 ஆயிரம் மற்றும்மொபைல் போனை பறித்துள்ளனர்.
மேலும் அருகில் நின்றிருந்த காஸ் சிலிண்டர் லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சம்பத் என்பவரின் கழுத்தியால் குத்தி மிரட்டி அவரிடமிருந்து ரூ. 800 மற்றும் மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து டிரைவர்கள் அருணாசலம், சம்பத் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர்.
இந்த வழக்கில் புதுச்சேரி உறுவையாறு பகுதியை சேர்ந்த சந்தோஷ் 24; ராமச்சந்திரன் 24; ஆகிய இருவரையும் நேற்று அதிகாலை பள்ளித்தென்னல் பகுதியில் கைது செய்தனர். இருவரும் லாரி டிரைவர்களை கத்தியால் குத்தி மிரட்டி, பணம் மற்றும் மொபைல் போன்களை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் இருவரையம் கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.