Politics
ரயிலில் சிக்கி மூதாட்டி பலி: போலீஸ் விசாரணை
விழுப்புரம்: திருத்துறையூர் - பண்ருட்டி ரயில் நிலையத்திற்கு இடையே ரயிலில் சிக்கி இறந்த அடையாளம் தெரியாத மூதாட்டி குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஐதரபாத் - கன்னியாகுமாரி நோக்கி செல்லும் அதிவேக விரைவு ரயில் ஒன்று நேற்று மாலை 3:00 மணிக்கு திருத்துறையூர் - பண்ருட்டி இடையே சென்று கொண்டிருந்தது.
இந்த ரயிலில் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் சிக்கி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் உக்ரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மூதாட்டி பற்றி விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.