Politics
கொளத்தூர் எம்.எல்.ஏ விஎஸ் பாபுவிற்கு 6வது நாளாக சிகிச்சை.. உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்
மூச்சுத்திணறல் காரணமாக எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் எம்.எல்.ஏ விஎஸ் பாபுவுக்கு 6வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 9ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ விஎஸ் பாபுவுக்கு, தொடர்ந்து 6வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஎஸ் பாபுவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், விஎஸ் பாபுவின் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு இயல்பான நிலையில் இருப்பதாகவும் எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.