Politics
தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய அதிகாரியை மணமுடித்த ஸ்வப்னா

திருவனந்தபுரம்: கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா, வழக்கில் தொடர்புடைய அதிகாரியை இரண்டாவது திருமணம் செய்தார்.
கடந்த 2022 ஜூலையில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, விமானத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துாதரகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதில், 14.82 கோடி மதிப்பிலான தங்கம் இருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், அப்போதைய துாதரக துணை துாதரின் நிர்வாகச் செயலர் ஸ்வப்னா சுரேஷ், துாதரக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார், அப்போதைய முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் சிவசங்கர் உட்பட, 44 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான ஸ்வப்னா, முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமாரை ஸ்வப்னா திருமணம் செய்துள்ளார். இது, இருவருக்கும் இரண்டாவது திருமணம்.