Politics
இதே நாளில் அன்று
செப்டம்பர் 15: காஞ்சிபுரம் மாவட்டம், சின்னகாஞ்சிபுரத்தில் நடராஜ முதலியார் - பங்காரு தம்பதியின் மகனாக, 1909ல்

காஞ்சிபுரம் மாவட்டம், சின்னகாஞ்சிபுரத்தில் நடராஜ முதலியார் - பங்காரு தம்பதியின் மகனாக, 1909ல் இதே நாளில் பிறந்தவர், அண்ணாதுரை எனும் அண்ணா.
காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் படித்த இவர், வறுமையால் படிப்பை கைவிட்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளரானார். பின், சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் சேர்ந்து எம்.ஏ., முடித்தார்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாக பேசும், எழுதும் திறனால் நாடகங்கள், திரைப்படங் களுக்கு கதை, வசனம் எழுதினார். ஈ.வெ.ரா.,வின் சமூக சீர்திருத்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு நீதிக் கட்சியில் சேர்ந்து, தி.க.,விலும் தொடர்ந்தார்.
பின், ஈ.வெ.ரா.,வுடன் ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, 1949ல் தி.மு.க.,வை தொடங்கி, ஹிந்தி எதிர்ப்பால் பிரபலமானார்.
கடந்த 1962ல் ராஜ்யசபா உறுப்பினரானார்; 1967ல் முதல்வராகி, 'மதராஸ்' மாநிலத்தின் பெயரை, 'தமிழ்நாடு' என மாற்றம் செய்தார். இருமொழி கொள்கை, சுயமரியாதை திருமண சட்டங்களை நிறைவேற்றிய இவர், தன் 59வது வயதில் 1969ல், பிப்ரவரி 3ல் மறைந்தார்.
மாநில சுயாட்சிக்கும், 'தமிழ்நாடு' என்ற வரலாற்று அடையாளத்திற்கும் அடித்தளமிட்ட அண்ணாதுரையின் பிறந்த தினம் இன்று!