Politics
திருமா பங்கேற்ற நிகழ்வில் மின்தடை-இருட்டில் நின்ற தொண்டர்கள்

விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால் அவர் சிறிது நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரமகேந்திரகோட்டை பகுதியில் நேற்று இரவு அம்பேத்கர் படிப்பகம் மற்றும் இரட்டைமணி சீனிவாசன் அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அதே நேரம் அங்கு அம்பேத்கர் சிலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது. மேலும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அப்பொழுது திருமாவளவன் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக அவர் மேடைக்கு வரும் பொழுது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொண்டர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தனர். பின்னர் செல்போனில் உள்ள டார்ச் லைட்டை பயன்படுத்தி அந்த வெளிச்சத்தில் திருமாவளவன் நிற்க வைக்கப்பட்டார். சிறிது நேரத்திலேயே மின்தடை சரி செய்யப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)