Politics
தி.மு.க., வீர வணக்க நாள் அஞ்சலி
விழுப்புரம்: விழுப்புரத்தில் சமூக நீதி போராளி மணிமண்டபத்தில், முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரம் மாவட்ட தி.மு.க., சார்பில், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஜானகிபுரத்தில் உள்ள சமூக நீதி போராளிகள் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
மணிமண்டபத்தில் உள்ள, 21 சமூகநீதி போராளிகளின் சிலைகளுக்கு, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கட்சியினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில், தி.மு.க., வானுார் எம்.எல்.ஏ., கவுதம், மாநில விவசாய அணி செயலாளர் அன்னியூர் சிவா, மாநில தீர்மானக்குழு துணை தலைவர் மாசிலாமணி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, கண்ணப்பன், மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன், நகர செயலாளர்கள் வெற்றிவேல், ஜெயமூர்த்தி, கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், ராஜா, சந்திரசேகரன், செல்வமணி, கணேசன், செல்வரங்கம், முரளி, மைதிலி ராஜேந்திரன், ராஜி, புஷ்பராஜ், பழனி, கல்பட்டு ராஜா, பேரூராட்சி செயலர் ஜீவா, ஒன்றிய சேர்மன்கள் வாசன், சச்சிதானந்தம், பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்சநாதன், இளங்கோவன், மாவட்ட இளைஞரணி தினகரன் மற்றும் பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, பெரியார் பிறந்த நாளையொட்டி, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில் கட்சியினர் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்றனர்.
