Politics
அன்புமணி அஞ்சலி
விழுப்புரம்: வன்னியர் சமூக இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்களின் நினைவிடத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி அஞ்சலி செலுத்தினார்.
விழுப்புரம் அருகே கோலியனுாரில் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் இறந்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பா.ம.க., தலைவர் அன்புமணி கலந்து கொண்டு, அங்குள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின், அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், விழுப்புரம் மாவட்ட செயலாளர் (வடக்கு) சிவக்குமார், தலைமை நிலைய செயலாளர் செல்வக்குமார், மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி, மாவட்ட தலைவர் தங்கஜோதி, மாநில வன்னியர் சங்க துணை தலைவர் அன்புமணி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் அன்பு, புகழேந்தி, அமைப்பு செயலாளர்கள் பழனிவேல், மணிமாறன், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் ஞானவேல், வன்னியர் சங்க செயலாளர் குமரகுருபரன், மாவட்ட தலைவர் தமிழழகன், முன்னாள் மாவட்ட செயலாளர் குமரன், அமைப்பு செயலாளர் மணிமாறன், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
