குடிநீர் வாரிய லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி
கோயம்பேடு: குடிநீர் வாரிய லாரி மோதியதில் துாக்கி வீசப்பட்ட மதின், 19, என்ற கல்லுாரி மாணவர், சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற இரு மாணவர்கள் காயமடைந்தனர்.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் மதின், 19. கோயம்பேடில் உள்ள செயின்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.பி.ஏ., இரண்டாமாண்டு மாணவர்.
இவர், தன்னுடன் பயிலும் சரண்ராஜ், கிருஷ்ணன் ஆகியோருடன், ‘கே.டி.எம்., டியூக்’ பைக்கில், திருமங்கலம் நோக்கி நேற்று மதியம் சென்று கொண்டிருந்தார்.
கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ்பகுதியில், திருமங்கலம் செல்லும் சாலையில் திரும்பியபோது, பின்னால் வந்த குடிநீர் வாரிய லாரி, பைக் மீது மோதியது.
இதில் மூன்று பேரும் துாக்கி வீசப்பட்டனர். பைக் ஓட்டி வந்த மதின் தலை மீது, லாரி ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த இரு நண்பர்களும், லேசான காய்களுடன் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர்.
கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மதின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் முகமது, 45, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
செயின்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று, போதை பொருள் ஒழிப்பு மற்றும் இணைய வழி குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.