Education
நல்லாசிரியர் விருது பரிசு பள்ளிக்கு வழங்கிய ஆசிரியர்
சேலம்: சேலம் முருங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்-ளியில், முதுகலை வேதியியில் ஆசிரியராக பணிபுரிபவர் பாலசுப்ரமணியன். இவர், இப்பள்-ளியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து, 100 சதவீத தேர்ச்சி வழங்குவதோடு, புத்தக தயாரிப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட், ஜே.இ.இ., பயிற்சி உள்ளிட்ட கற்பித்தல் பணிகளை செய்து வரு-கிறார்.
இதை பாராட்டி, நடப்பு கல்வியாண்டுக்கான நல்-லாசிரியர் விருதை, தமிழக அரசு வழங்கியுள்-ளது. கடந்த 5ல் சென்னையில் நடந்த ஆசிரியர் தினவிழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இவருக்கு விருது வழங்கினார்.
விருதுக்காக வழங்கிய பரிசு பணத்தை, நேற்று பள்ளியில் குடிநீர் வசதி ஏற்படுத்த, பள்ளி நிர்வா-கிகளிடம் ஆசிரியர் பாலசுப்ரமணியன் ஒப்படைத்தார். தலைமை ஆசிரியர் பத்மநாபன் மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பி-னர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர் ஆசி-ரியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.