Arts, culture, entertainment and media
ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: ஓய்வு பெற்றோருக்கு பணமில்லாத மருத்துவ வசதி, என்.எச்.ஐ.எஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசாணை எண் 123ஐ ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சிவபெருமான், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா, பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளான சந்திரராஜன், ராமஸ்ரீனிவாசன், சந்தியாகப்பன், பெருமாள்சாமி, மாரிக்கனி ஆகியோர் வாழ்த்தினர். மாநில செயலாளர் குருசாமி கண்டித்து பேசினார்.