Crime, law and justice
தமிழக அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்

புதுச்சேரி: குடும்ப தகராறில் சகோதரரை தாக்கிய வழக்கில், தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், புதுச்சேரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
கடந்த, 2022 ஆக., 8ல் புதுச்சேரி எழில் நகரில் உள்ள தன் அண்ணன் மரிய குளோத், 45, என்பவ ரின் வீட்டின் கதவை உடைத்து, அவரையும், அவரது மனைவி கெரோலின், 42, என்பவரையும் தாக்கியதாக மரிய வில்சன் மீது, லாஸ்பேட்டை போலீசார், வழக்கு பதிந்தனர்.
புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்த இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் பெற நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும், மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார்.
புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், வழக்கினை ரத்து செய்யக்கோரியும் மரி ய வில்சன் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 'நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன்' எனக்கூற, 'நிதியமைச்சர் மரிய வில்சன், இங்கிலாந்து அரசரா?' என மிக காட் டமாக, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், புதுச்சேரி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என, அறிவுறுத்தியது.
தொடர்ந்து, செப்., 31ல் நீதிமன்றத்தில் ஆஜராவதாக, மரிய வில்சன் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டும் அவர், ஆஜராகாததால், விசாரணை செப்., 4க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று, புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி சந்திரசேகரன் முன், மரிய வில்சன் நேரில் ஆஜரானார்.
வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நகல் அவருக்கு முறைப்படி வழங்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையை செப்., 9க் கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.
அமைச்சர் மரிய வில்சன் சார்பில் , இவ்வழக்கில் நேரடியாக ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டும், இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என, இரண்டு தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன. இந்த மனுக்களும் வரும் 9ல் விசாரணைக்கு வர உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

