தில்லியில் கனமழை எதிரொலி: விமான சேவை பாதிப்பு!

தில்லியில் பெய்த கனமழையால் 2 மற்றும் 3 உள்ளிட்ட அணுகு சாலையில் மழைநீர் தேங்கியதால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
தில்லி விமான நிலையம்.
புதுதில்லி: புதுதில்லியில் இன்று கொட்டித் தீர்த்த கனமழையால், தில்லி விமான நிலையத்தின் 2 மற்றும் 3 அணுகு சாலை மற்றும் முன்பகுதியில் மழைநீர் தேங்கியதால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
கருமேகங்கள் சூழ்ந்து பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்ததால், விமான நிலையத்திலும் வெள்ள நீர் சூழ்ந்து விமான சேவை பாதிக்கப்பட்டது. இரண்டு முனையங்களுக்குள் அதிகப்படியான மழைநீர் புகுந்ததாகவும், பிறகு மழைநீர் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வானம் கருமேகங்களால் சூழப்பட்டிருந்த நிலையில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய தீவிர மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டதன் காரணமாக குறைந்தது ஒன்பது விமானங்கள் மாற்று இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. இதில் 4 விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் லக்னோவிற்கும், ஒரு விமானம் அகமதாபாத்திற்கும் திருப்பி விடப்பட்டன.
Delhi airport experienced water logging at Terminal 2 and 3.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
