Lifestyle and human interest
தவறான உறவுக்கு அழைத்து பெண்ணை தாக்கியவர் கைது
மயிலாப்பூர்:பெண்ணை அழைத்து சென்று, தவறான உறவுக்கு வற்புறுத்தி கத்தியால் தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
துரைப்பாக்கத்தை சேர்ந்த, திருமணமான 25 வயது பெண் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 6ம் தேதி நான் வீட்டில் இருந்தபோது, 'எனக்கு அறிமுகமான மயிலாப்பூரைச் சேர்ந்த அறிவழகன், 32 என்பவர் உங்களிடம் தனியாக பேச வேண்டும்' எனக் கூறி ஆட்டோவில் மயிலாப்பூர் பாஷா தோட்டம் சாந்தோம் சாலைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அவர் என்னிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசியது மட்டுமல்லாமல் தவறான உறவுக்கும் அழைத்தார். நான் மறுக்கவே கத்தியால் தாக்கினார். நான் சத்தோம் போடவே அருகே உள்ள பொதுமக்கள் திரண்டதால், அறிவழகன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் போலீசார் நேற்று அறிவழகனை கைது செய்தனர். அறிவழகன் மயிலாப்பூர் காவல் நிலைய பழைய குற்றவாளி என்பதும் அவர் மீது, கொலை, கொலை முயற்சி உட்பட, 9 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.