காவலர் தினத்தை ஒட்டி உறுதிமொழி

சேலம்: தமிழக காவலர் தினத்தை ஒட்டி, சேலம் மாநகர போலீஸ் கமி-ஷனர் அலுவலகம் அருகே ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு ஸ்துபியில், போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார், நேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட போலீசார், காவல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதேபோல் குமாரசா-மிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில், பணியின்போது உயிர்-நீத்த காவலர்களை நினைவுபடுத்தி, டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹடி-மணி, எஸ்.பி.,குத்தாலிங்கம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, 'சட்டத்துக்காக உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் பணிபுரிவோம்' என, காவலர் தின உறுதிமொழியை போலீசார் எடுத்துக்கொண்டனர்.