சுவாமி தாலி திருடிய முதியவர் மே.பாளையத்தில் சுற்றிவளைப்பு
ஏற்காடு:ஏற்காடு, முருகன் நகர் தேவி கருமாரியம்மன் கோவிலில் கடந்த, 8ல் மர்ம நபர் புகுந்து, சிசிடிவி கேமராவை,
முருகன் நகர் தேவி கருமாரியம்மன் கோவிலில் கடந்த, 8ல் மர்ம நபர்
புகுந்து, 'சிசிடிவி' கேமராவை, பெயின்ட் டப்பாவால் மறைத்து, கருவறை
கதவை உடைத்து சுவாமிக்கு அணிவித்திருந்த தாலியை திருடிச்சென்றார்.
அதேபோல் ஜெரினாக்காடை சேர்ந்த, வேணுகோபாலின் மனைவி வளர்மதி நடத்தும்
பெட்டிக்கடையில், 20,000 ரூபாயை திருடிச்சென்றார். ஏற்காடு போலீசார்,
'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய ஒருவரை கண்டறிந்து, அவரை தேடும்
பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சேலம், ஈரோடு, கோவை மேட்டுப்பாளையம்
ஆகிய இடங்களில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மேட்டுப்பாளையம்
பஸ் ஸ்டாண்டில் இருந்த அந்த நபரை, போலீசார் சுற்றிவளைத்து நேற்று
பிடித்தனர். விசாரித்ததில், கோவை, ஓடந்துறை, கோவிந்தசாமி நகர்
திம்பா மேஸ்திரி தோட்டத்தை சேர்ந்த கோபால், 56, என்பதும், அவர் தான்
கடையில் திருடியதும் தெரிந்தது. அவரை கைது செய்து, சுவாமி நகையை மீட்டனர். பணத்தை செலவு செய்தது தெரிந்தது.