நாய்கள் கடித்து ஆடு, கோழிகள் பலி
கிருஷ்ணராயபுரம்:பிள்ளபாளையம் பகுதியில், வெறி நாய்கள் கடித்து ஆடு, கோழிகள் இறப்பது தொடர்கிறது.
அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்தில், விவசாயிகள் ஆடு, கோழிகளை
வளர்த்து வருகின்றனர் தற்போது, அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித்
திரிகின்றன. அப்போது, விவசாயிகள் வளர்க்கும் ஆடு, கோழிகளை
தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் கடித்து குதறி விடுகிறது.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பஞ்சாயத்து
பகுதிகளில் திரியும் தெரு நாய்களை பிடிக்க துரித நடவடிக்கை எடுக்க
வேண்டும் என விவசாயிகள் கூறினர்.