வெறிநாய்கள் கடித்ததில் செம்மறி ஆடுகள் பலி

அரவக்குறிச்சி:க.பரமத்தி அருகே, நாய்கள் கடித்ததில் செம்மறி ஆடுகள் பலியாகின.
மாவட்டம், க.பரமத்தி பவித்திரம் கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்
பால கிருஷ்ணன், 50; விவசாயி. இவர் செம்மறி ஆடுகளையும் வளர்த்து
வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவரது பட்டியில்
அடைக்கப்பட்டிருந்த செம்மறி ஆடுகளை, நாய்கள் கடித்துள்ளன. அதில்,
நான்கு செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
மருத்துவர்கள், உயிரிழந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர்.
காயம்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இறந்த ஆடுகளுக்கு
இழப்பீடு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டது.