லோக் அதாலத்தில் 417 வழக்குகள் தீர்வு
பண்ருட்டி: பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தில்(தேசிய மக்கள் நீதிமன்றம்)் 417 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
பண்ருட்டி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சப் ஜட்ஜ் அனிதாஆனந்த் தலைமையில் நடந்தது. மாஜிஸ்திரேட்கள் கீதா, மார்ஷல்இயேசுவடியான் முன்னிலை வகித்தனர்.
பண்ருட்டி நீதிமன்றத்தின் அனைத்து சங்கங்களை சார்ந்த வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகள், வங்கி அலுவலர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
லோக் அதாலத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 417 வழக்குகள் சமரசம் செய்து முடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக ரூ.5கோடியோ 33 லட்சத்து 20 ஆயிரத்து 407 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் தியாகப்பிரியன் செய்திருந்தார்.