ராமநாதபுரத்தில் லோக் அதாலத்:1408 வழக்குகளுக்கு தீர்வு
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத் முகாமில் 1408 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.9கோடியே 43 லட்சம் தீர்வு தொகை வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையகம் சார்பில் லோக் அதாலத் நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி டி.வி.மணி துவங்கி வைத்தார். மாவட்ட நீதிமன்ற வளாகம், பரமக்குடி, முதுகுளத்துார், கமுதி, கடலாடி, திருவாடானை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் 11 அமர்வுகள் நடந்தது. குற்றவியல் நீதிபதி ஜெயசுதாகர், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாஸ்கர், சார்பு நீதிபதி மும்தாஜ், நடுவர் எண் 2 ஆதியன், வழக்கறிஞர் சங்க தலைவர் அன்பு செழியன் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இதில் வங்கி சார்ந்த 340 வழக்குகளில் 102 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.2 கோடியே 12 லட்சத்து 88 ஆயித்து 327 தீர்வு தொகை வழங்கப்பட்டது. நிலுவையில் உள்ள 1467 சிறு குற்ற வழக்குகளில் 1205 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.46 லட்சத்து 22 ஆயிரத்து 600 தீர்வு தொகை வழங்கப்பட்டது. வங்கி காசோலை மோசடி சார்ந்த 25 வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு சார்ந்த 54 வழக்குகள் மற்றும் 7 குடும்ப வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டது. 2941 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் 1408 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.9 கோடியே 43 லட்சத்து 68 ஆயிரத்து 933 தீர்வு தொகை அறிவிக்கப்பட்டது. ---