Politics
வ.உ.சி. 155வது பிறந்தநாளில் மாலை அணிவித்து மரியாதை
கோவை: வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி, வ.உ.சி. மைதானத்தில் உள்ள அவரது சிலைக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘‘விடுதலை போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற குறிப்பிடத்தக்க தலைவர்களில் வ.உ.சிதம்பரனாரும் ஒருவர். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை அரசியல் ரீதியாக மட்டுமின்றி, வணிக ரீதியாகவும் எதிர்த்தவர்,’’ என்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா, சூலூர் எம்.எல்.ஏ., சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.